கிரிக்கெட் வீரர் அஸ்வினை தளபதி என அழைத்த விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!!

0

அஹமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரசிகர்கள் அவரை நோக்கி ‘தளபதி அஸ்வினே’ என அழைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் மைதானத்தில் தளபதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றுள்ளது. அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கவுள்ள 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. தளபதியின் மாஸ்டர் படத்தில் உள்ள ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து வாத்தி காமிங் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

‘தளபதி 65க்கு பிறகு கேஜிஎப் சண்டை காட்சிகளை மறந்து விடுவீர்கள்’ – இயக்குனர் நெல்சன் பேட்டி!!

சமீபத்தில் வெளியான இந்த வீடியோ வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் அஹமதாபாத்தில் உள்ள மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நடிகர் விஜயின் ரசிகர்கள் அஸ்வினை நோக்கி ‘தளபதி அஸ்வினே’ என அழைத்துள்ளனர். இந்த விடியோவும் தற்போது இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here