#TNvsMP விஜய் ஹசாரே கோப்பை – மத்திய பிரதேச அணி அசத்தல் வெற்றி!!

0

தற்போது விஜய் ஹசாரே தொடரில் இன்றைய போட்டியில் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச அணிகள் விளையாடினர். இந்த போட்டியில் மத்திய பிரதேச அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

தமிழ்நாடு vs மத்திய பிரதேஷ்:

இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விஜய் ஹசாரே தொடரில் இன்றைய போட்டியில் தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. மேலும் தமிழ்நாடு அணியின் சிலம்பரசன் மற்றும் முகமத் மிக சிறப்பாக பந்து வீசினர். இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 225 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – சுழற்பந்து வீச்சில் அசத்தும் இந்திய அணி!!இங்கிலாந்துக்கு 6 விக்கெட் காலி!!

மேலும் மத்திய பிரதேச அணி சார்பில் ஆதித்யா மற்றும் சஹானி தலா 46 ரன்களை குவித்தனர். 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு இந்த போட்டி சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மத்திய பிரதேச அணியின் பந்து வீச்சில் தமிழ்நாடு அணியின் விக்கெட்கள் சீட்டுக்கட்டாக சரிந்தது. தமிழ்நாடு அணி சார்பாக அதிகபட்சமாக ஷாருகான் 67 ரன்கள் எடுத்தார். முடிவில் தமிழ்நாடு அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் மத்திய பிரதேச அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here