பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கார் விபத்தில் படுகாயம் – கவலையில் ரசிகர்கள்!!

0

அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல கோல்ப் வீரரான டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்துக்களுள்ளாகியது. தற்போது அவர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார்

டைகர் வூட்ஸ்:

இவர் கடந்த 1996ம் ஆண்டு முதல் கோல்ப் விளையாட்டை விளையாட துவங்கினார். மேலும் இவர் தனது 20 வயதிலேயே விளையாட்டு துறைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1997ம் ஆண்டு உலக கோல்ப் வீரர்களின் பெயர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். மேலும் இவர் இதுவரை 15 முக்கிய கோல்ப் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் இதுவரை தனது உடலில் பல முறை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் இவர் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகே உள்ள ரோலிங் ஹில் எஸ்டேட் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது கார் இவரது கட்டுப்பாடை இழந்தது. மேலும் கார் கவிழ்ந்து புல்வெளியில் உருண்டு விபத்துக்கு உள்ளாகியது.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் அக்சர் படேல் அசத்தல் பந்துவீச்சு – இங்கிலாந்துக்கு 4 விக்கெட் காலி!!

அவர் காரில் தனியாக சென்ற நிலையில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காலில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here