புதுச்சேரியில் அமலுக்கு வரும் குடியரசு தலைவர் ஆட்சி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

0

புதுச்சேரியில் தற்போது ஆட்சி கவிழ்ந்த நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியமைக்க கோரி தமிழிசை சௌந்தரராஜன் மத்திய அமைச்சருக்கு பரிந்துரை செய்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் ஜவடேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமலுக்கு வரும் குடியரசு தலைவர் ஆட்சி

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி, சட்டசபையில் தனது மெஜாரிட்டியை இழந்துள்ளது. நாராயணசாமி தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமியின் ஆட்சி நிலைகுலைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதையடுத்து சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில், மிக குறைந்த வாக்குகளுடன் நாராயணசாமி அரசு மெஜாரிட்டியை இழந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் வேறு எந்த கட்சிகளும் ஆட்சி புரியாத நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியமைக்க கோரி பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்து, குடியரசு தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளதாக மத்திய சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் அர்ச்சனா மகளை கலாய்க்கும் நெட்டிசன்கள் – பதிலடி கொடுத்த சாரா!!

இது குறித்து மத்திய அமைச்சர் கூறும்போது, ‘துணைநிலை ஆளுநரின் இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்த பின்பு புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்படும். பிற்பாடு புதுச்சேரியை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here