கோலாகலமாக நடைபெறும் தைப்பூச திருவிழா – அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

0

தமிழ் கடவுளான முருகப்பெருமானை போற்றும் வகையில் இன்று தைப்பூசத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக அலைமோதி வருகின்றனர்.

தைப்பூசம்:

ஆண்டு தோறும் தமிழ் கடவுளான முருகப்பெருமானை போற்றும் வகையில் ஜனவரி மாதம் 28ம் தேதி அன்று தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் போது பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு இந்த ஆண்டு முதல் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறையாக அறிவித்தது. மேலும் இந்த திருவிழா இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசிய போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பொது விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. பழனியில் தைப்பூச திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 22ம் தேதி முதல் திருவிழா தொடங்கியுள்ளதால் அங்கு பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளனர். மேலும் பழனியில் நாள் ஒன்றுக்கு 25,000 பக்கதர்களை தரிசிக்க அனுமதித்து வருகின்றனர்.

பக்தர்கள் அலைமோதல்:

மேலும் திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 16 வகை அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி 50 சீருடை அணியாத காவலர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருச்செந்தூர் கோவிலிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு இன்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முருகனை தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதது.

தணிக்கை செய்யப்பட்ட வீடியோ – கூகிள், பேஸ்புக் மற்றும் யூடூப் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

இதேபோல் வடபழனி கோவிலிலும் தைப்பூச திருவிழா மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. வடபழனியில் தற்போது கோவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் காவடி எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது திருவிழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் போலீசார் கடுமையான பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here