நினைவு இல்லமாக மாறும் வேதா இல்லம் – தமிழக முதல்வர் இன்று திறந்து வைப்பு!!

0

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் தற்போது நினைவு இல்லமாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று ஜெயலலிதாவின் நினைவு இல்லம் திறக்கப்பட உள்ளது.

வேதா இல்லம்:

மறைந்த முன்னாள் தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். அவரது மறைவிற்கு பின்பு அதனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவிக்கப்பட்ட ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளனர். போயஸ் தோட்டத்தை கையகப்படுத்தியுள்ளதை எதிர்த்து தீபக் மனு அளித்துள்ளார். மேலும் இழப்பீடு வழங்கிய உத்தரவு எதிர்த்து தீபா மனு அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாதாடிய தீபக்கின் வகிக்கில் கூறியதாவது, ‘ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிய நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது’ என்று அவர் கூறினார். இதற்கு பதில் கூறும் வகையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தற்போது மனுதாரர்கள் வசம் வேதா இல்லம் இல்லை. மேலும் கையகப்படுத்துவைத்தற்கான அனைத்து சட்டவிதிகளை பின்பற்றியுள்ளோம். வேதா இல்லத்தை நாங்கள் வணிக ரீதியாக பயன்படுத்தவில்லை.

இன்று திறப்பு:

ஜெயலலிதா வாழ்ந்த வாழ்க்கையை மக்களுக்கு காட்டவும், அவரின் நினைவுகளை பாதுகாப்பதற்காக தான் கையகப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து முடிவுகளை தெரிவித்த நீதிபதி ஜெயலலிதாவின் இல்லம் நினைவு இல்லமாக திறப்பதற்கு அனுமதி அளித்தார். மேலும் பல விதிமுறைகளுக்கு உட்படுத்தியே நினைவு இல்லம் திறக்கப்படும். ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா முன்னிலையில் அங்குள்ள அனைத்து பொருட்களையும் பட்டியலிட வேண்டும் என்று அறிவித்துள்ளார். இதனால் சில காலத்திற்கு மக்கள் நினைவு இல்லத்தை பார்ப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மாடர்ன் புடவையில் கிக்கான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்று காலை 10.30 மணி அளவில் நினைவு இல்லமாக திறக்கப்படவுள்ளது. இதனை துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைக்கவுள்ளார். மேலும் அங்கு உயரதிகாரிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள் மூலமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதுகாப்பிற்காக அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here