இந்தியாவில் டிக் டாக் சேவைகள் முழுமையாக நிறுத்தம் – 2000 பேர் பணிநீக்கம்!!

0

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கூறி பல்வேறு தரப்பில் குற்றசாட்டுகள் எழுந்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு. தொடர்ந்து இந்தியாவில் தனது சேவையை முழுமையாக நிறுத்திக்கொள்வதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிக் டாக் சேவைகள் நிறுத்தம்

சீனாவின் டிக் டாக் செயலியில் பதிவேற்றப்படும் காணொளிகள் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இந்தியாவின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருப்பதால் அந்த செயலலிக்கு தடை கேட்டு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த செயலிகளுக்கான தடை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பதில் அளிக்குமாறு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அந்த நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட பதில் திருப்திகரமாக இல்லாத நிலையில் அந்த செயலிகளுக்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சீனாவின் ‘பைடடன்ஸ்’ நிறுவனம் டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளின் சேவையை இந்தியாவில் முற்றிலுமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் சார்பில் இந்தியாவிலிருக்கும் அந்நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. அம்மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்திய அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக டிக் டாக் மற்றும் ஹலோ செயலியிலன் சேவைகள் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்படுகிறது. இதனால் அந்நிறுவன ஊழியர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியும். இந்தியாவில் டிக் டாக் சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் மீண்டுமாக இந்த சேவைகள் தொடங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நினைவு இல்லமாக மாறும் வேதா இல்லம் – தமிழக முதல்வர் இன்று திறந்து வைப்பு!!

இதுகுறித்து டிக் டாக் செய்தி தொடர்பாளர் கூறியபோது, ‘கடந்த ஜூன் 29 ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய அரசின் உத்தரவிற்கு ஏற்ப இந்தியாவின் சட்டங்கள் மட்டும் விதிமுறைகளுக்கேற்றபடி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. கடந்த ஏழு மாதங்களாக இதற்கான முயற்சிகள் தொடர்ந்த போதிலும் செயலியின் பயன்பாடுகள் குறித்து இன்னும் முழுமையான தீர்வு வரவில்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் இந்தியாவில் 2000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிக் டாக் செயலியை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here