தணிக்கை செய்யப்பட்ட வீடியோ – கூகிள், பேஸ்புக் மற்றும் யூடூப் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

0

தணிக்கை செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட உத்தரவிடக்கோரி மதுரை கிளையில் ஓர் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து கூகிள் நிறுவனத்தை பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

யூடுப்:

சென்னையில் கடந்த மாதம் ஓர் யூ-டியூப் சேனல் பெண்களிடம் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ ஒன்றை எடுத்து அதனை வெளியிட்டது. இதனால் அனைவரும் அதிர்ந்து போனார்கள். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்து வந்தனர். மேலும் அந்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ பல்வேறு தரப்பினரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது அது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. குறிப்பாக பேஸ்புக் மற்றும் யூடியூப் மூலம் அதிகமாக பரவி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அந்த விடியோக்களில் சென்சார் எதுவும் போடப்படவில்லை. இதனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது இதுகுறித்து நெல்லை சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓர் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,’கடந்த 2012ம் ஆண்டில் எடுத்த கணக்கின் படி பெண்களுக்கு எதிராக விடியோவை பதிவு செய்வதில் இந்தியா 3 வது இடத்தை பிடித்துள்ளது.

முதல்வரை சந்தித்த நடிகர் விவேக் – இது தான் காரணமா??

தற்போது அதனை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற தகவல்களை இனி ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கவேண்டும் என்று மனுவை அளித்துள்ளார். தற்போது இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.சந்தோஸ் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து கூகிள் நிறுவனம் சார்பாக முகநூல், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு இது குறித்து எடுத்த நடவடிக்கைகளின் தகவலை தெரிவிக்கவேண்டும் என்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here