விவசாயிகள் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு – டெல்லியில் பதட்டமான சூழ்நிலை!!

0

வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

கண்ணீர் புகைக்குண்டு

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் கடந்த 62 நாட்களாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுதினமான இன்று விவசாயிகள் 2 லட்சம் டிராக்டரில் பேரணி வர இருந்தனர். போலீசாரின் அனுமதிக்கு பிறகு டெல்லியின் புறநகர் பகுதியில் பேரணி நடைபெற இருந்தது. குடியரசுதின விழாவின் கொடியேற்றத்திற்கு பிறகு பேரணி நடத்தப்படப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வாகன காப்பீட்டு திட்டத்துடன் இணையும் விதிமீறல் அபராதம் – ஐ.ஆர்.டி.ஏ அறிவிப்பு!!

தொடர்ந்து பகல் 12 மணிக்கு பிறகு பேரணி நடத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவரை போலீசார் தடுப்புகளை வைத்து விவசயிகளை தடுத்து வைத்திருந்தனர். ஆனால் 12 மணிக்கு முன்னதாகவே விவசாயிகள் தடுப்புகளை மீறி பேரணியை ஆரம்பிக்க முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை அங்கிருந்து கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here