வெங்காய விலை மீண்டும் உயர்வு – ஏற்றுமதி அதிகரிப்பின் எதிரொலி!!

0

இந்தியாவில் வெங்காய விலை மீண்டுமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் அறுவடை செய்யும் வெங்காயங்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் வெங்காய விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வெங்காயவிலை அதிகரிப்பு

கடந்த ஆண்டு பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி அதிகமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய் வரை விற்கப்படவேண்டிய சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான், துருக்கி, எகிப்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டு 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!!

இந்தியாவில் மஹாரஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெங்காய சாகுபடிகள் அதிகமாக நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெங்காயங்களின் அளவை பொறுத்துதான் நாடு முழுவதும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மழைக்கு பிறகு நவம்பர் முதல் மீண்டுமாக வெங்காய சாகுபடிகள் துவங்கியுள்ளன. இதனால் டிசம்பர் மாதம் முதல் பெரிய வெங்காயம் கிலோ 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டது.

சாகுபடி செய்யப்படும் வெங்காயங்கள் மீண்டுமாக அரபு நாடுகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏற்றுமதி செய்வதற்கான மத்திய அரசின் தடை இருக்கின்ற போதிலும் எப்படி வெங்காயம் விலை உயரக்கூடும் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here