சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

தமிழ் சினிமாவில் மனம் கொத்தி பறவை என்னும் திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் ஆத்மியா. இவருக்கு தற்போது திருமணம் ஆகியுள்ளது. தற்போது அதற்கான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆத்மியா:

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை தான் நடித்துள்ளார் ஆத்மியா. இவர் கடந்த 2012ம் ஆண்டில் நடித்த மனம் கொத்தி பறவை திரைப்படம் மூலம் இவர் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பும் அருமையாக அனைவரையும் கவரும் வண்ணத்தில் இருக்கும். மேலும் இந்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படம் என்று கூட சொல்லலாம். இந்த படத்திற்கு பிறகு ஆத்மியா சமுத்திரகனியுடன் இணைந்து வெள்ளை யானை படத்தில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெங்காய விலை மீண்டும் உயர்வு – ஏற்றுமதி அதிகரிப்பின் எதிரொலி!!

இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு நேற்று கேரளாவில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இவரது கணவர் கன்னூரை சேர்ந்த கப்பல் துறையில் பணிபுரியும் சனூப் என்பவர் ஆவார். தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஆத்மியா சிவப்பு நிற புடவையில் தேவதை போல் காட்சியளித்துள்ளார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here