ஐபிஎல் மினி ஏலம் 2021 – தேதியை அறிவித்த பிசிசிஐ!!

0

தற்போது இந்தியாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வைத்து ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக மினி ஏலத்தை நடத்துவதற்கான தேதியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல்:

உலகின் புகழ் பெற்ற தொடரான ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் முதல் மே மாதங்களில் இந்தியாவில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் மெகா ஏலம் நடத்த வாய்ப்பில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. காரணம் அடுத்த மாதம் முதல் இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. எனவே அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேதி அறிவிப்பு:

இதற்காக அனைத்து அணிகளும் கடந்த வாரமே தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவை இல்லாத வீரர்களை வெளியிட்டுள்ளது. மேலும் ஐபிஎல்லில் விளையாடப்போகும் 8 அணிகளும் மினி ஏலத்திற்காக தயார் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஏலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது.

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது – விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!!

முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் வைத்து விளையாட உள்ளது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி முடிவடைகிறது. எனவே மினி ஏலத்தை வரும் 18 அல்லது 19ம் தேதிகளில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் சென்னையில் வைத்து ஏலத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெறவில்லை. ஆனால் இந்த முறை சையது முஷ்டாக் அலி கோப்பை சிறப்பாக நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டியும் இங்கு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here