வாகன காப்பீட்டு திட்டத்துடன் இணையும் விதிமீறல் அபராதம் – ஐ.ஆர்.டி.ஏ அறிவிப்பு!!

0

போக்குவரத்தின் போது விதிகளை மீறுகிறார்களோ அவர்கள் இனி அதற்கான அபராதத்தை தங்கள் வாகனத்தின் காப்பீட்டு தொகையுடன் செலுத்தும் புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. தற்போது அதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துக்கு விதிமீறல்:

போக்குவரத்துக்கு விதிகளை மீறுபவர்கள் அதற்கான அபராதம் செலுத்தும் வகையில், அந்த தகவல் காப்பிட்டு நிறுவனத்திற்கு அனுப்பப்படும். விரைவில் விதி மீறல்களுடன் காப்பிட்டு இணைக்கும் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இதனால் காப்பிட்டு கட்டணத்தை நிர்ணயிக்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி உள்ளது என்று ஐ.ஆர்.டி.ஏ தெரிவித்துள்ளது. தற்போது இது குறித்த விதிகள் தயாரிக்கப்பட்டு அதனை வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தயாரிக்கப்பட்ட விதிகள்:

ஒவ்வரு சாலை விதிமீறல்களுக்கும் தனி தனி பாயிண்டுகள் அமைக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் தான் வாகனத்திற்கான காப்பிட்டு தொகையும் நிர்ணயம் செய்ய இருக்கிறது. அதிக முறை சாலை விதியை மீறியிருந்தால் அதற்கு ஏற்பது போல் காப்பிட்டு கட்டணமும் அதிகரிக்கும். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு தான் அதிக அளவில் பாயிண்டுகள் விதிக்கப்படவுள்ளது. வாகன சேதம், மூன்றாம் நபர் காப்பிட்டு, தனி நபர் விபத்து காப்பீடு மற்றும் விதிமீறல் காப்பிட்டு இதன் அடிப்படையில் வாகன காப்பிட்டு நிர்ணயிக்கப்படும்.

ரம்யா பாண்டியனுக்கும், பிக் பாஸ் பிரபலத்துக்கும் திருமணம்?? தம்பியின் பதில்!!

காப்பிட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவே ஐ.ஆர்.டி.ஏ பல முடிவுகளை எடுத்துள்ளது. வாகனம் காப்பிட்டு எடுப்பதற்காக, பழைய காப்பீட்டை புதுப்பிக்கும் பொழுது ஏற்கனவே இவர் சாலை விதிகளை மீறியுள்ளவரா என்பதை அறிவதற்கான அனுமதி காப்பிட்டு நிறுவனத்திற்கு உள்ளது. மேலும் வாகனம் ஓட்டுபவர் யார் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். வாகனத்தின் உரிமையாளரே சாலை விதிமீறலுக்கு பொறுப்பு என்பதை தெளிவாக கூறியுள்ளது. புதிய விதிமுறையை உருவாகும் பொறுப்பினை ஐ.ஆர்.டி.ஏ கீழ் செயல்படும் இன்சூரன்ஸ் இன்பர்மேஷன் பியூரோ அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் டெல்லியில் இந்த திட்டம் பரிசோதிக்கப்படும் என்றும் வரும் 1ம் தேதி அன்று இது குறித்த முடிவுகள் வெளிவரும் என்றும் ஐ.ஆர்.டி.ஏஅறிவித்துள்ளது.

விதிமீறல்                                                           பாயிண்ட்

மது போதையில் வாகன ஓட்டுதல்                                 100
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல்                       90
காவல்துறையை மதிக்காத போக்கு                               90
அதிவேகமாக ஓட்டுதல்                                                  80
ஓட்டுநர் உரிமம், காப்பிட்டு இல்லாமல் ஓட்டுதல்           70
தவறான பாதையில் ஓட்டுதல்                                        60
தடைசெய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வது    50
சிக்னல் மீறுதல்                                                              50
அதிக பாரம் ஏற்றி செலுத்தல்                                         40
பாதுகாப்பு விதிமீறல்                                                      30
பார்க்கிங் விதிமீறல்                                                        10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here