சப்பாத்தி, இட்லி, தோசைக்கு உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.., இந்த மாதிரி செஞ்சு கொடுங்க., மிச்சமே இருக்காது!!

0
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.., இந்த மாதிரி செஞ்சு கொடுங்க., மிச்சமே இருக்காது!!
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.., இந்த மாதிரி செஞ்சு கொடுங்க., மிச்சமே இருக்காது!!

பொதுவாக சைவ பிரியர்கள் பலரும் முட்டையை விரும்பி உண்ணுவார்கள். அப்படி இருக்கையில் இந்த முட்டையை வைத்து சுவையான ஒரு ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இதை சுட சுட இட்லி, தோசை, சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் – 1
  • சின்ன வெங்காயம் – 5
  • இஞ்சி – சிறிய துண்டு
  • வெள்ளைப் பூண்டு – 6
  • முந்திரிப்பருப்பு – 5
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • பட்டை – ஒரு துண்டு
  • ஏலக்காய் – ஒரு துண்டு
  • அண்ணாச்சி பூ – 1

செய்முறை விளக்கம்

இந்த முட்டை குழம்பு ரெசிபி செய்வதற்கு மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, முந்திரி பருப்பு, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, ஏலக்காய் போட்டு நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அண்ணாச்சி பூ மற்றும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு கொள்ளவும். இதோடு இரண்டு தக்காளியை விழுது பட அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

என்னது.., தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆதங்கம் – ட்விட்டர் வைரல்!!

மேலும் இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும். மேலும் அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி அடுப்பை குறைத்து வைத்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பின் அடுப்பை ஆப் செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here