என்னது.., தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆதங்கம் – ட்விட்டர் வைரல்!!

0
என்னது.., தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆதங்கம் - ட்விட்டர் வைரல்!!
என்னது.., தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆதங்கம் - ட்விட்டர் வைரல்!!

இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான சினிமாவை சேர்ந்த நடிகர் நடிகைகளை அங்கீகரிக்கும் விதமாக தேசிய விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது . இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து தேசிய விருது பெற்ற படங்கள் குறித்து நேற்று வெளியான பட்டியலில் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படமாக ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ அறிவிக்கப்பட்டது. இது மக்கள் பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இப்படம் வெளியான சமயத்தில் இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. சொல்ல போனால் தமிழகத்தில் ஒரு தியேட்டரில் கூட இப்படம் ஓடவில்லை.

தமிழகத்தில் ஆட்டோ பயணத்திற்கான பிரத்யேக செயலி., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அப்பேற்பட்ட இந்த படத்திற்கு விருது கொடுத்ததை எதிர்த்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைபாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here