தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

0

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. விஜய் டிவி என்றாலே பிரபல நிகழ்ச்சிகளுக்கும் சீரியல்களுக்கும் பெயர் போன ஒன்றாக மாறி விட்டது.

விஜய் டிவிக்கு எதிராக போட்டி போட்டு கொண்டு ஜீ தமிழ், சன் டிவியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்பொழுது முடிவுக்கு வர இருக்கும் நிலையில் அதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

 Zomato-வில் பயனாளர்களே., இனி நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் செய்யலாம்., டெலிவரி வாகனத்தின் புகைப்படம் உள்ளே…

அதாவது அர்ஜுனுக்கு அவரது அம்மாவே விஷம் வைப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதில் தான் ஏதோ ட்விஸ்ட் இருப்பது போன்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோமாவில் இருந்து எழுந்த அர்ஜுன் தனது மாமாவை பற்றி எதுமே சொல்லாமல் இருப்பது தான் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதை வைத்து பார்த்தால் அர்ஜுன் திருந்தி விட்டதாகவும், சில விஷயங்களுக்காக நடிப்பதாகவும் அதில் தான் ட்விஸ்ட் வைத்து சீரியலை முடிக்க போகிறார்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here