தமிழக அரசு பள்ளிகளில் 2,098 ஆசிரியர் பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான 2,098 காலி பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்க கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணி

தமிழகத்தில் உள்ள அரசு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,098 ஆசிரியருக்கான காலி பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக விருப்பமும், தகுதியும் உள்ள முதுகலை பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டதாரிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தமிழக அரசின் மாத சம்பளம் 36,900 ரூபாய் முதல் 1,16,600 ரூபாய் வரை வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

சொந்த செலவில் கட்அவுட் வைத்துக்கொண்ட ரம்யா பாண்டியன் – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

இந்த பணியிடங்களுக்கான தகுதியாக முதுகலையில் வேதியியல், தாவரவியல், உயிர்வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு, நிலவியல், இந்திய கலாச்சாரம், கணிதவியல், அரசியல் அறிவியல், தமிழ், இயற்பியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் 50 சதவீதம் தேர்ச்சியுடன் பி.எட் படிப்பு முடித்தவர்களின் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு கட்டணமாக எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு ரூபாய் 250 மற்றும் பிற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் 500 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்வு கட்டணத்தை வங்கிகளின் வரவு அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான www.trb.nic.in இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள் 1-3-2021 முதல் 25-3-2021 வரை ஆகும். போட்டிகளுக்கான எழுத்து தேர்வு ஜூன் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற இணைதளத்தை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here