விவசாய பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் – தமிழக முதல்வர் வாக்குறுதி!!

0

தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் உடுமலையில் பேசிய போது விவசாய பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர்:

தமிழகத்தில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது சேலம் மாவட்டம் உடுமலையில் தமிழக முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உடுமலையில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே முதல்வர் திறந்த வேனில் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி செய்யும் காலத்தில் உடுமலையில் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் தங்களது குறைகளை பற்றி தெரிவிக்க 1100 என்ற இலவச பிரத்யேக எண் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது உடுமலையை தலைமை இடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிமுக அரசு சிறப்பாக செய்து வருகிறது. விரைவில் விவசாய பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழை தொழிலாளர்கள் போன்றோர்களுக்கு கான்க்ரீட் வீடு கட்டி தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். விவசாயங்களுக்கு செய்த உதவி மூலம் தற்போது 100 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

மேலும் உடுமலை அருகே சுமார் ரூ.250 கோடியில் கால்நடை மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்லூரி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட பணிகள் துவங்கப்பட்டு சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இது இந்த சுற்றுவட்டார பகுதி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுமார் ரூ.1,418 கோடியில் குடிமராமத்து பணிகள் சிறப்பான முறையில் நிறைவடைந்துள்ளது. இதனால் குளம், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. இவ்வாறு தனது பிரச்சாரத்தில் முதல்வர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here