பிபிசி சேனலுக்கு சீன அரசு தடை – அமெரிக்கா கண்டனம்!!

0

கொரோனா பரவல் குறித்தும் உயர்குர் முஸ்லிம்கள் குறித்தும் பிரபல பிபிசி தொலைக்காட்சி தவறான செய்தியை பரப்பியதாக கூறி சீன அரசு தற்போது அந்த சேனலை தடை செய்துள்ளது.

பிபிசி:

கடந்த 2019ம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய வைரஸ் சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. இந்த வைரஸின் தாக்கம் இன்னும் உலகத்தை விட்டு செல்லவில்லை என்று தான் சொல்லவேண்டும். மேலும் இந்த வைரஸினால் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது உயிரை இழந்துள்ளனர். தற்போது அனைத்து உலக நாட்டிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். மேலும் சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதா?? என்பதை கண்டறிய உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு சென்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு சென்ற சுகாதார அமைப்பினர் மேற்கொண்ட ஆய்வில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவவில்லை என்றும் அது வேறு ஒரு மாகாணத்தில் இருந்து பரவத்தொடங்கியது என்றும் அறிவித்தனர். இதற்கு அமெரிக்க அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது. ஏற்கனவே சீனாவில் உயர்குர் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருகிறது என்று புகார் எழுந்தது. தற்போது பிரபல பிபிசி செய்தி தொலைக்காட்சியை சீன அரசு தடை செய்துள்ளது. காரணம் கொரோனா பரவல் சீனாவில் இருந்து பரவிய செய்தி குறித்தும் மேலும் சீனாவில் உள்ள ஜிங்ஜியாங் மாகாணத்தில் உயர்குர் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருகிறது என்றும் பல தவறான செய்திகளை பிபிசி தொலைக்காட்சி பரப்பி வருகிறது.

ரோஹித் சர்மா தனது ஸ்டைலை மாற்றக்கூடாது – ஸ்ரீகாந்த் பேட்டி!!

மேலும் இதற்கு கண்டனத்தை தெரிவித்த சீன அரசு தற்போது பிபிசி தொலைக்காட்சியை அதிரடியாக தடை செய்துள்ளது. தற்போது இதற்கு இங்கிலாந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் கூறியதாவது சீனா செய்த செயல் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். மேலும் சீனாவின் செயலுக்கு அமெரிக்காவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here