திருப்பதிக்கு ரயில் மூலம் ஒரு நாள் சுற்றுலா – மத்திய ரயில்வே அறிவிப்பு!!

0

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய ‘டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ரயில் மூலம் ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவை மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

திருப்பதிக்கு ஒரு நாள் சுற்றுலா

ஆந்திர மாநிலம் திருப்பதியில் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிரடியாக உடல் எடையை குறைத்த “மாஸ்டர்” பட நடிகை – போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு ரயில் மூலம் ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவை இந்திய ரயில்வே துவங்கியுள்ளது. முன்னதாக ஆந்திர சாலை போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து கழகம் மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் சாலை வழி மார்க்கமாக ஒரு நாள் சுற்றுலா திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலே முதல் முறையாக ‘டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ரயில் மூலம் திருப்பதிக்கு ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here