தமிழகத்தில் செப்.14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு?? அரசு சார்பில் விளக்கம்!!

0

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்கிற தகவல் பொய்யானது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திரையரங்குகள் திறப்பு குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இதற்கு மாறாக செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

school
school

செப்.12 முதல் 80 சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கம் – ரயில்வே வாரிய தலைவர் அறிவிப்பு!!

மேலும் அக்டோபர் 1 முதல் திரையரங்குங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் உலா வந்தது. இந்நிலையில் இவற்றிற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் திரையரங்குகள் குறித்து வெளியான தகவல்கள் பொய்யானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு உரிய நேரத்தில் அறிவிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here