செப்.12 முதல் 80 சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கம் – ரயில்வே வாரிய தலைவர் அறிவிப்பு!!

0
train
train

நாடு முழுவதும் செப்டம்பர் 12 முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இவற்றிற்கான முன்பதிவு செப்டம்பர் 10 முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியுள்ளார். ஏற்கனவே 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்:

கொரோனா பரவல் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மார்ச் 25 முதல் இந்திய ரயில்வே பயணிகள், புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை நிறுத்தியது.

வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ரயில்வே மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது. இது மே 12 முதல் 30 சிறப்பு ஏர் கண்டிஷனிங் ரயில்களையும், ஜூன் 1 முதல் 200 ரயில்களையும் இயக்கத் தொடங்கியது. கடந்த வாரம், செப்டம்பர் 7 முதல் மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும், செப்டம்பர் 21 முதல் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளில் 50 சதவீதம் ஆசிரியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

corona precautions
corona precautions in railway stations

செப்.8 இல் மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை – ஊரடங்கில் மேலும் தளர்வுகள்??

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பயணியர் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன. மாறாக வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு மற்றும் தேர்வுகள் இதுபோன்ற பிற நோக்கங்களுக்காக மாநில அரசுகளின் கோரிக்கையை பொறுத்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. அன்லாக் 4 வழிகாட்டுதல்களை அமலுக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்திய ரயில்வே மேலும் பல சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசித்து வருவதாகவும் ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here