செப்.8 இல் மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை – ஊரடங்கில் மேலும் தளர்வுகள்??

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் 8ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஆலோசனை:

தமிழகத்தில் இதுவரை 4,51,827 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில் 7,687 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் தகவலாக 3,92,507 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி வரும் நிலையில், 100க்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். இதற்கு மத்தியில் பேருந்து பொதுப்போக்குவரத்து மற்றும் பயணியர் ரயில் இயக்கத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Conference
Conference

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!!

மேலும் 100% ஊழியர்களுடன் நிறுவனங்கள் இயக்கம், மால்கள், கோவில்கள் திறப்பு என தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவக் குழுவுடன் செப்டம்பர் 8ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் தற்போது அளிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here