மசூதியில் தொழுகையின் போது வெடிவிபத்து – 12 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் காயம்!!

0

பங்களாதேஷில் உள்ள ஒரு மசூதியில் தொழுகையின் போது ஆறு ஏர் கண்டிஷனர்கள் வெடித்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் துரிதமாக ஈடுபட்டு உள்ளனர்.

மசூதி வெடிவிபத்து:

பங்களாதேஷ் நாட்டின் ஃபதுல்லா நகரில் உள்ள பைட்டஸ் சலாம் மசூதியில் நேற்று இரவு 8.45 மணியளவில் விபத்து நடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மசூதியில் தொழுகையின் போது எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீப்பொறி ஏர் கண்டிஷனர்களை வெடிக்க வைத்துள்ளது. இது அடுத்தடுத்து பரவி 6 ஏசிக்கள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 12 பேர் பலியாகி உள்ள நிலையில் 27 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களில் சிலர் 99% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மசூதிக்கு அடியில் செல்லும் ஒரு எரிவாயு குழாய் கசிவு தொடர்பாக மசூதி நிர்வாக குழு சமீபத்தில் புகார் அளித்தும் அதனை அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. மேலும் மசோதியின் ஜன்னல்கள் மூடப்பட்டதால் குழாயிலிருந்து எரிவாயு கசிந்து கட்டிடத்திற்குள் குவிந்துள்ளது. இந்த வாயுக்கள் மூலம் தீப்பொறி கிளம்பி வெடிவிபத்து நிகழ்ந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2021 நடுப்பகுதி வரை கொரோனா தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது – WHO அதிர்ச்சி தகவல்!!

மேலும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் பங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here