ரொம்ப மனஅழுத்ததோட இருக்கீங்களா?? – அப்போ இதை படிங்க!!

0
stress level of indians
stress level of indians

இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு மேலோங்கியுள்ள பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பள்ளி குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள் இதோ.

மனஅழுத்தம்:

சில வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் எண்ணிக்கையை குறைக்கலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் நாம் வேலை என்றே ஓடி கொண்டிருக்கிறோம். நம்மை நாமே பார்த்துக்கொள்ள கூட நேரமிருப்பதில்லை.

Stress-down
Stress-down

சிறிதும் ஓய்வின்றி வேலைகள் செய்வதால் கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. வயதிற்கு மீறிய சுமைகளை அவர்கள் மீது சுமத்தும் போது மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் இன்றைய வாழ்கை முறை. இதனை விரட்ட சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும்.

stress
stress
  • உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். தினமும் காலையில் மூச்சு பயிற்சி மேற்கொள்வது மூலம் மனஅழுத்தம் குறைந்து உடலும் மனமும் லேசாகும்.
  • வீட்டிலேயே முடங்கி கிடப்பதை விட்டுவிட்டு சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனித்து கொண்டு நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் சற்று குறையும்.
  • ஓய்வாக இருக்கும் வேளைகளில் உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். இது மனதிற்கு ஆறுதல் அளிப்போதோடு மனஅழுத்தத்தையும் குறைக்கும்.
  • மனஅழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது வயிறு குலுங்க சிரிப்பதால் அந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். எனவே வயிறு குலுங்க சிரித்து பழகுங்கள். மனஅழுத்தம் குறையும். உங்களை சிரிக்க வைப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களிடம் அதிகமாக பழகுங்கள்.
  • இனிப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு வருவதால் மனஉளைச்சலை தூண்டும் ஹார்மோன்கள் குறைக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் போன்ற இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here