Thursday, May 16, 2024

47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது – ஜனாதிபதி கவுரவிப்பு!!!

Must Read

ஆசிரியர் தினமான இன்று தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் காணொளி காட்சி வாயிலாக வழங்கினார்.

தேசிய ஆசிரியர் தினம்:

இன்று முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு “தேசிய நல்லாசிரியர் விருது” ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

ram nath govind
ram nath govind

இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் காரணமாக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதினை காணொளி காட்சி வாயிலாக வழங்கினார்.

இந்த ஆண்டு விழா:

இந்த ஆண்டு 47 ஆசிரியர்கள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விழா ஜனாதிபதி தலைமையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த விருது பெற்றவர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் சரஸ்வதி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலிப் தமிழகத்தை சேர்ந்த விருது பெற்ற ஆசிரியர்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே உஷார்.. இந்த 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை  மையம் எச்சரிக்கை!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் மே மாதங்களில் வெயில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை வாட்டிவதைத்து வரும்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -