தமிழக மக்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு – உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!!

0

திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசாக மக்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று இன்றைய பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் மக்களுக்கு 2500 ரூபாய் போதாது என்பதாக தனது கருத்தினையும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு:

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு பல வித சலுகைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. அதில் கொரோனா பொது முடக்கத்தின் போது மக்களுக்கு அரசு சார்பில் ரேஷன் அட்டைதார்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. இது மக்களுக்கு அப்போது பெரிதும் உதவியாக இருந்தது. இப்படியான நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு மக்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Pongal Prize

இதற்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். மக்களுக்கு இந்த ஆண்டு 2500 ரூபாய் ரொக்கம், ஒரு முழு கரும்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் கருத்து:

இப்படியான நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் திமுக கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “விடியலை நோக்கி” என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு கடலூரில் உள்ள சுனாமி நினைவு தூணில் அஞ்சலி செலுத்தினார். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் பொங்கல் பரிசு ரூ.2500??

அப்போது அவர் தமிழக அரசு வழங்க இருக்கும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு மக்களுக்கு போதாது என்றும் அவர்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here