குஜராத்தில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா – முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்!!

0

ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. வெறும் இரண்டே ஆண்டுகளில் இந்த உயிரியல் பூங்கா நிறுவப்படும் என்றும் அதனை அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி செயல்படுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது பற்றி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகார இயக்குனர் பரிமல் நாத்வானி கூறுகையில் “இந்த உயிரியல் பூங்கா திட்டத்தை சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் நிறுவ இருக்கிறோம். ஏற்கனவே திட்டமிடப்பட்ட இது கொரோனா காரணமாக தடை பட்டு இருந்தது. இப்போது தடைகள் விலகிய நிலையில் இந்த திட்டம் மறுபடியும் ஆரம்பிக்கபட்டுள்ளது. இரண்டே ஆண்டுகளுக்குள் இதன் பணிகள் முடிவடைந்து, பூங்கா திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

ambani request government to ban 2g network services

“உலகின் மிகப்பெரிய சிலை (சர்தார் வல்லபாய் பட்டேல்) குஜராத்தில் உள்ளது என்பது நமக்கு தெரியும். அதை போலவே உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எண்ணிக்கையிலும், வகைகளிலும் அதிக அளவு விலங்குகளை கொண்ட உயிரியல் பூங்கா ஜாம் மாநகரில் தொடங்கப்படும்” என்று குஜராத் கூடுதல் தலைமை செயலாளர், M.K.தாஸ் கூறியுள்ளார்.

தமிழக மக்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு!!

உலகிலுள்ள அனைத்து விதமான பறவைகள், விலங்குகள், ஊர்வன , நிலம் மற்றும் நீரில் வாழ்வன, பூச்சிகள் வாழிடம், தவளைகளின் இருப்பிடம், ட்ராகன் பூமி, இந்திய பாலைவனம், மேற்கு சதுப்பு நிலக்காடுகளில் வாழும் உயிரிகள்,வெளிநாட்டு தீவு உயிரிகள் என வகைப்படுத்தப்பட்டு இடமளிக்கப்படும் என்றும் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த உயிரியல் பூங்காவில் அரிய உயிரினங்களான ஆசிய சிங்கம் , சிறுத்தை, இந்தியநரி, ஆப்பிரிக்க யானை, மனித குரங்கு, பூனை, கரடி இனங்கள், வங்கப்புலி, கொரில்லா , வரிக்குதிரை ஆகியா பல ஆயிரக்கணக்கான உயிரினங்களும், விலங்குகளும், இடம் பெற உள்ளதாக தெரிகின்றது. குஜராத்தில், உலகின் மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து, தற்போது மிகப்பெரிய உயிரியல் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது மிகுந்த ஏதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here