ஸ்டெர்லைட் போராட்ட விசாரணை – 19ஆம் தேதி விளக்கம் அளிக்க ரஜினிகாந்திற்கு சம்மன்!!

0

ஸ்டெர்லைட் ஆலை போராட்ட சம்பவம் குறித்து ரஜினிகாந்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த வரும் 19ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் பிரச்சனை:

கடந்த 2019 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைத்தனர். ஆனால், இதனை தமிழக அரசு ஏற்காததால் பொது மக்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கினர். பல கட்டங்களாக இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது போலீசார் மக்கள் மீது தடியடி நடத்தினர். ஆனாலும், மக்களை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் துப்பாக்கிசூட்டில் இறங்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் பரிதமாக 19 பேர் பலியாகினர். பெண்கள் உட்பட பலரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது. இதனால் மக்கள் அந்த ஆலையினை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். தமிழக அரசும் ஆலையினை காலவரையின்றி மூட உத்தரவிட்டது. இந்த போராட்டம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை அப்போது தெரிவித்து இருந்தனர்.

தமிழக மக்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு!!

Rajnikanth
Rajnikanth

அப்படி நடிகை ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலையின் போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக கூறினார். இது குறித்து ஆணையம் அவரிடம் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருந்தது. அவரது தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் மீண்டும் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 19 ஆம் தேதி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here