வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் பொங்கல் பரிசு ரூ.2500?? உணவுத்துறை அதிகாரி கருத்து!!

0

தமிழக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூபாய் 2500 பணத்தை வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு:

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ரூபாய் 1000 பணத்துடன் பொங்கலுக்கு தேவையான பொருட்களை கொடுத்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ரொக்க பணமாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் பணத்துடன் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த பொருட்களின் பட்டியல் – பச்சரிசி மற்றும் சர்க்கரை தலா 1 கிலோ, 20 கிராம் முந்திரி மற்றும் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஓர் முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த பொங்கல் பரிசு 2.06 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். மேலும் இதனை வாங்க எந்த தேதியில் வரவேண்டும் என்பதற்காக பயனாளர்களின் வீடுகளில் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மக்கள் அனைவரும் ரொக்கப்பணம் வாங்கும் ஆர்வத்தில் கடைகள் முன் கூட்டம் கூடுவர். மேலும் பணம் வழங்கும் பொது ஆளும் கட்சியினர் அங்கு கூட்டம் கூடுவர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சட்ட ஒழுங்கு சீர்கேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜன.4 முதல் 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு!!

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டுடன் தங்களது ஆதார் கார்டை இணைக்க அரசு ஏற்கனவே சட்டம் பிறப்பித்துள்ளது. மேலும் தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்கவும் சட்டம் பிறப்பித்துள்ளது. மேலும் கிராமத்தில் வசிப்பவர்கள் பிரதமரின் “ஜன்தன் யோஜனா” திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை மக்களும் தங்களுக்காக வங்கி கணக்கை துவங்கியுள்ளனர்.

எனவே ஆதார் கார்டு மூலம் அவர்களது வங்கிக்கணக்கில் தொடர்பு கொண்டு பொங்கல் பரிசு ரொக்க பணமான ரூபாய் 2500 வங்கியில் நேரடியாக அரசு செலுத்தலாம் என்று கூறியுள்ளார். இதற்க்கு வெறும் 5 நாட்களே தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் கொரோனா பரவலையும் தடுக்க நேரிடும், மேலும் ஊழல் எதுவும் நடக்க நேரிடாது என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here