பார் திறப்பிற்கு அனுமதி தாருங்கள், இல்லையெனில் டாஸ்மாக்கு பூட்டு – உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!

0

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்பட்டன. தற்போது தமிழகம் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ள நிலையில் பார்களை திறக்க அனுமதி தாருங்கள் இல்லையெனில் டாஸ்மாக்கு பூட்டு போட்டு போராடுவோம் என்று பார் ஊரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

டாஸ்மாக்:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளன. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 4 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக்கை திறக்க அரசு அனுமதியளித்து. ஆனால் பார்களை திறக்க அனுமதியளிக்கவில்லை. இதனால் பார் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் & கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க கூட்டம் நேற்று முன்தினம் மாலை சென்னையில் உள்ள முகப்பேர் சத்யா நகரில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்ளை சந்தித்து பேசினார் தமிழ்நாடு டாஸ்மாக் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன்.

அன்பரசன் கூறியதாவது,

ஊரடங்கிற்கு பின் பல கடைகள் அலுவலகங்கள் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளுடன் பார்களும் இயங்குவதற்கு அனுமதியளிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார். கடந்த பத்து மாதங்களாக எங்களது ஊழியர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் பொங்கல் பரிசு ரூ.2500??

இதனால் கடந்த 10 மாதங்களுக்கான கட்டிட வாடகையை பார் உரிமையாளர்களுக்கு நிவாரண தொகையாக 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் முறையாக லைசென்ஸ் வாங்கி நாங்கள் நடத்தும் பார்களை இதுவரை திறக்காததால், எங்களது வைப்பு தொகையை திருப்பி தரவேண்டும். இல்லையென்றால் எங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்கும் டாஸ்மாக்கை வரும் 28 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அதற்கு பூட்டு போட்டு எங்கள் போராட்டத்தை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அது சுமுகமாக முடியவில்லை எனில் எங்கள் போராட்டம் ஆரம்பிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here