ஜன.4 முதல் 2500 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!

0

தமிழக முதல்வர் அதிரடியாக சனிக்கிழமை அரிசி அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்த நிலையில் பொங்கல் பரிசு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு முதல் அரசி அட்டைதார்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, 1000 ரொக்க பணம் மற்றும் சில மளிகை சாமான்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2500 ரூபாய் ரொக்க பணமும், ஒரு முழு கரும்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கபடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

cmo of tamilnadu
cmo of tamilnadu

இதற்கு எதிர்க்கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இது போன்ற இலவசங்களை வழங்கி ஓட்டுக்களை பெற நினைக்கிறார்கள் என்று அனைவரும் முதல்வரை விமர்சித்தனர். இது குறித்த காரசாரமான விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. இது இப்படியாக இருக்க அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டதாவது, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தான் மக்களுக்கு பொங்கல் பரிசு கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை!!

தற்போது இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2.10 கோடி அரிசி அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் இதற்காக தமிழக அரசு 5,604.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி முதல் மக்கள் ரேஷன் கடைகளில் தங்கள் பொங்கல் பரிசினை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here