தமிழகத்தில் இன்று திறக்கப்படவுள்ள 34 வகை கடைகள் – என்னென்ன..? முழு விபரங்கள் இதோ..!

0

தமிழகத்தில் இன்று முதல் (மே 11) ஊரடங்கில் பல்வேறு வகையான தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. அதன்படி 34 வகை கடைகளை திறந்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் குளிர்சாதன வசதியுள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கடைகளின் விபரம்:

  1. டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
  2. பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
  3. உணவகங்கள் (பார்சல் மட்டும்)
  4. பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள்
  5. கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
  6. மின்சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  7. சிமெண்ட், ஹார்டுவேர் மட்டும் சானிடரிவேர் விற்கும் கடைகள்
  8. மொபைல் போன் விற்கும் மட்டும் பழுது நீக்கும் கடைகள்
  9. கணினி விற்கும் மட்டும் பழுது நீக்கும் கடைகள்
  10. வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
  11. மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  12. கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  13. சிறிய நகைக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதது)
  14. சிறிய ஜவுளிக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதது) – ஊரக பகுதிகளில் மட்டும்
  15. டிவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
  16. மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
  17. பர்னிச்சர் கடைகள்
  18. பெட்டி கடைகள்
  19. சாலையோர தள்ளுவண்டி கடைகள்
  20. கூரியர் மற்றும் பார்சல் சர்விஸ்
  21. லாரி புக்கிங் சர்விஸ்
  22. உலர் சலவையகங்கள்
  23. ஜெராக்ஸ் கடைகள்
  24. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையகங்கள்
  25. இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர பழுது நீக்கும் கடைகள்
  26. நாட்டு மருந்து விற்பனை கடைகள்
  27. டைல்ஸ் கடைகள்
  28. விவசாய இடுபொருட்கள் மற்றும் நாட்டு மருந்து விற்பனை கடைகள்
  29. பெயிண்ட் கடைகள்
  30. எலக்ட்ரிகல் கடைகள்
  31. நர்சரி கார்டென்கள்
  32. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
  33. ப்ளைவுட் மற்றும் மரக்கடைகள்
  34. மரம் அறுக்கும் கடைகள்

கொரோனா தொற்றின் தன்மையைப் பொறுத்து வரும் காலங்களில் மேலும் பல கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேற்குறிப்பிட்ட கடைகளில் குளிர்சாதன வசதி இருந்தால் அதனை இயக்காமல், வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளி, முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here