தமிழகத்தில் ஊரடங்கு ரத்து..? புதன்கிழமை விரிவான விசாரணை..!

0
lock down
lock down

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு வரும் புதன் கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது. இதை நீதிபதிகள் விரிவாக விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு ரத்து:

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் பொழுதும் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மட்டும் ஊரடங்கை கடுமைப்படுத்தவும் அரசு மறுத்து விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை ரத்து செய்யுமாறு இம்மானுவேல் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.

அப்பாடா..! ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

chennai high court
chennai high court

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது, கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் வரை அது நம்முடன் தான் இருக்கும், மாஸ்க், தனிமனித இடைவெளி போன்ற நிபந்தனைகளை பின்பற்றினாலே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மேலும் சில நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தாமலேயே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி உள்ளன. எனவே முழு ஊரடங்கை ரத்து செய்து, மாஸ்க், தனிமனித இடைவெளி போன்ற விதிகளை மட்டும் அமல்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை வரும் புதன்கிழமை நீதிமன்றம் விரிவாக விசாரிக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here