அப்பாடா..! ஒரு வழியாக குறைந்தது தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்..!

0
Gold
Gold

ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து விலையேறிக்கொண்டே வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்து உள்ளது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டதால் வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் விலை ஏறிக்கொண்டே சென்றது. இதற்கு முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியது தான் முக்கிய காரணம். தற்போது கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கி உள்ள நிலையில், தங்கத்தின் தேவை அதிகரித்து உள்ள காரணத்தால் கடந்த 1 வாரமாக தொடர்ந்து விலை ஏறிக்கொண்டே சென்றது. இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Gold Purchase
Gold Purchase

திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலையா.? உறவினர்கள் குமுறல்..!

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ. 4,532க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து ரூ. 36,256க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ. 52.60 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 52,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here