தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளது – முக ஸ்டாலின்..!

0
Stalin
Stalin

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க அரசின் அலட்சியம் தான் காரணம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பி உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சமூகப் பரவலாக மாறி இருப்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக திமுக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Palanisamy & MK Stalin
Palanisamy & MK Stalin

மேலும் கொரோனா வைரஸ் இறப்பு விபரங்களை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க அரசின் அலட்சியம் தான் காரணம் என அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

முதல்வருக்கு 5 கேள்விகள்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஐந்து கேள்விகை எழுப்பியுள்ளார். அவற்றிற்கு பதிலளிக்குமாறு கோரியுள்ளார்.

  1. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
  2. தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்றால் ஏன் பாதிப்பு அதிகரித்து வருகிறது?
  3. ஊரடங்கின் போது குழுவுக்கு மேல் குழு என அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எங்கே?
  4. எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஆலோசிக்க அரசு ஏன் தயங்குகிறது?
  5. பொருளாதார மீட்பு, வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய எப்போது அரசு ஆர்வம் காட்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here