கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 நிறங்களாக பிரிக்கப்படும் தமிழக மாவட்டங்கள்.!

0

கொரோனா தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது தமிழகத்தில் 3 வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு இந்த நிறங்களுக்கான அர்த்தத்தை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. எனினும் இந்த பட்டியல் வைரலாகி வருகிறது.

லாக்டவுன்

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் ஏப்ரல் 14 இல் முடிவடைவதாக இருந்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கூடிய அமைச்சரவை கூட்டத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு மாநில அரசு கட்டுப்படும் என முடிவு செய்துள்ளனர்.

மாவட்டங்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை பொறுத்து அவை சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் என பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தவே இந்த வண்ணங்களுக்குள் மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிவப்பு மாவட்டங்கள்

மாவட்டங்கள்

அதன்படி சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் சிவப்பு நிறத்தின் கீழ் வந்துள்ளன.

ஆரஞ்சு மாவட்டங்கள்

File:Orage 8aout2017.jpg - Wikimedia Commons

மாவட்டங்களில் அதிக பாதிப்பு என்பதை உணர்த்தவே இப்படி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 முதல் 20-க்குள் வருகிறது.

மஞ்சள் மாவட்டங்கள்

Vue... après l'orage ! - Picture of Riad Letchina, Fes - Tripadvisor

மேலும் நீலகிரி, காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகள் மஞ்சள் நிறத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 விட குறைந்து காணப்படுகிறது. எனினும் அரசு இந்த நிறங்களுக்கான அர்த்தத்தை இதுவரை தெளிவுப்படுத்தவில்லை. எனினும் இந்த பட்டியல் வைரலாகி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here