இந்தியாவில் 90 மருத்துவ பணியாளர்களை தாக்கிய கொரோனா – அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

0

கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடி கொண்டேபோகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த  உலகம் முழுவதுக்கும் போராடிக்கொண்டிருக்கிறது.இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக போர் புரிபவர்கள் வழி நடத்துபவர்கள்  மருத்துவர்கள் செவிலியர்கள். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அந்த தொற்றால் பாதிக்கப்படும் அதிக வாய்ப்பு இருப்பவர்களும் மருத்துவ செவிலியர்கள்.

இந்தியாவில் கொரோனா பாதித்த எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆயிரத்தை எட்டிவிட்டது. இதுவரை 300க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 763 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் 39 பேர் மரணம் அடைந்துள்ளனர். கரோனா பாதிப்பில் நாட்டிலேயே மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் தமிழகமும் தில்லியும் உள்ளன.

இந்தியாவில் மருத்துவர்கள்,செவிலியர்கள் 90 பேருக்கு கொரோனா

இந்தியாவில் மருத்துவர்கள்,செவிலியர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றி உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது,அவர்கள் சிகிச்சை அளித்த  நோயாளிகள் மற்றும் அவர்களுடன் பணியாற்றியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இவர்களது சிகிச்சையால் தொற்று நீங்கி குணமடைந்த நிலையில் பலர் வீடு திரும்பி வருகின்றனர்.

கொரோனா வைரஸுக்கு பாலி ஆன மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு மருத்துவர்கள் ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் நான்கு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.தமிழகத்தில் தற்போதுவரை 39,401 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அரசின் கண்காணிப்பில் 162 நபர்கள் உள்ளனர் என்றும் கொரோனா அறிகுறி தென்பட்ட நபர்களிடம் இருந்து 10,655 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்

கொரோனா பாதிக்கப்பட்ட தமிழக மருத்துவர்கள்

தமிழகத்தில் சென்னையில் 4 மருத்துவர்கள், ஈரோடு – 2, நாகப்பட்டினம், தூத்துக்குடியில் தலா 1 என மொத்தம் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இறுக்கிப்பதாகவும் இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here