தமிழகத்தில் 1500ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக விபரம்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் தற்போது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் மூலம் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் சென்ற வாரங்களில் குறைந்த அளவே காணப்பட்ட கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது அனைவர்க்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் புதிதாக ஏற்படாதது மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதுவரை 15 பேர் மட்டுமே உயிர் இழந்து உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 411 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 285 பேர்
  • தஞ்சாவூர் – 46 பேர்
  • கோவை – 133 பேர்
  • திண்டுக்கல் – 74 பேர்
  • திருநெல்வேலி – 62 பேர்
  • செங்கல்பட்டு – 53 பேர்
  • மதுரை – 46 பேர்
  • விழுப்புரம் – 33 பேர்
  • நாகப்பட்டினம் – 43 பேர்
  • கடலூர் – 26 பேர்
  • திருவாரூர் – 26 பேர்
  • தென்காசி – 22 பேர்
  • விருதுநகர் – 28 பேர்
  • காஞ்சிபுரம் – 9 பேர்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 46 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் இறப்பு விகிதமும் மிக குறைவாகவே உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here