கனடாவில் வரலாறு காணாத பயங்கர தாக்குதல் – 16 பேரை சுட்டுக்கொன்ற மர்மநபர்..!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அனைத்து நாடுகளையும் அலற வைத்துள்ளது. இந்நிலையில் கனடாவில் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் போலீஸ் போல் உடையணிந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

51 வயதான நபர்:

கனடாவில் 51 வயதான போலீஸ் உடையணிந்த மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் ராயல் கனடியன் போலீஸ் வாகனத்தில் வந்து இந்த தாக்குதலை அவர் நடத்தியுள்ளார். இதில் போர்ட்டாபிக் என்ற சிறிய ஊரில் வீடுகளில் வெளியேயும் உள்ளேயும் ஆங்காங்கே உடலக்ள் சிதறிக் கிடந்தன. மேலும் இதில் பெண் போலீசார் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தியவரை கார்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் போலீசார் தேடினர். பின்பு அவர் நகரின் என்பீல்டு என்ற இடத்தில் கேஸ் நிலையத்தில் அவரை கண்டறிந்து உள்ளனர். அவரும் உயிரிழந்து விட்டதாகவும், அவரது பெயர் கேப்ரியல் வார்ட்மேன் (வயது 51) என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது .

இதற்கு முன்னர் தாக்குதல்கள்:

கனடாவில் இந்த மாதிரி துப்பாக்கிசூடுகள் நடைபெறுவது அரிதான ஒன்றாகும். இதற்கு முன்னர் 1989-ல் நடந்த தனிமனித பைத்தியகார துப்பாக்கிச் சூட்டில் 14 பெண்கள் பலியானதையடுத்து அங்கு பதிவு செய்யாமல் கைத்துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாக்கப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து கனடா போலீசார் ‘கனடா வரலாற்றில் இல்லாத ஒரு மோசமான அர்த்தமற்ற வன்முறைச் செயல்’ என்று வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here