தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – தலைநகரை மையமாக கொண்ட பாதிப்பின் முழு ரிப்போர்ட்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இதன் பாதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால் தடுப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. அதிலும் தலைநகரமான சென்னை கொரோனவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒரு நாளில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா:

  • தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் – 2,162 பேர்
  • இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 1,09,961
  • கொரோனா உறுதி செய்யப்படாத மாதிரிகளின் எண்ணிக்கை – 1,05,864
  • வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை – 30,580 பேர்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய 44 ஆய்வகங்கள் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. அதில் 33 அரசு ஆய்வகங்கள் மற்றும் 11 தனியார் ஆய்வகங்கள் ஆகும். இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,455 ஆண்கள், 707 பெண்கள் ஆவர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 82 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,210 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் நேற்று கொரோனவால் இருவர் உயிரிழந்து உள்ள நிலையில் தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 922 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மாநகரம் தான் கொரோனவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக பாதிப்பு:

  • சென்னை – 767 பேர்
  • கோவை – 141 பேர்
  • திருப்பூர் – 112 பேர்
  • திண்டுக்கல் – 80 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • மதுரை – 79 பேர்
  • நெல்லை – 63 பேர்
  • செங்கல்பட்டு – 74 பேர்
  • நாமக்கல் – 59 பேர்
  • திருச்சி – 51 பேர்
  • திருவள்ளூர் – 54 பேர்
  • தேனி – 43 பேர்
  • நாகை – 44 பேர்
  • கரூர் – 42 பேர்
  • ராணிப்பேட்டை – 39 பேர்
  • கள்ளக்குறிச்சி – 9 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here