13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுகவே காரணம் – சட்டசபையில் முதல்வர் ஆவேசம்!!

0

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார். இன்றைய சட்டசபை கூட்டத்தில் நீட் தேர்விற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சியான திமுக தலைவர் முக ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார்.

நீட் தற்கொலை – சட்டசபையில் எதிரொலி:

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு பயத்தினால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் இந்த ஆண்டு ஒரே நாளில் 3 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் நேற்று முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கி உள்ளது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்கள் நீட் எதிர்ப்பு முகக்கவசங்களுடன் வருகை புரிந்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று கூடிய சட்டசபையில், நீட் தேர்வினால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசினை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நீட் தேர்வு விடைத்தாள்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் மாணவர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை, மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி இந்த மாதம் மட்டும் நீட் தேர்வால் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாலியை கழட்டி வைத்து விட்டு தேர்வெழுதும் கொடுமை நடந்துள்ளது, கருணாநிதி ஆட்சியில் இருந்த பொழுது நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என தெரிவித்தார்.

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததா இல்லையா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து ஆவேசமாக பேசிய முதல்வர், தமிழகத்தில் நீட் தேர்வினால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here