1.30 மணிநேரம் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வு – சென்னை பல்கலை அறிவிப்பு!!

1
Online Exam
Online Exam

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் 1.30 மணிநேரம் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடைத்தாள்களை ஒப்படைக்கும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் தேர்வு:

கொரோனா பாதிப்பு காரணமாக இறுதிப்பருவம் தவிர்த்து பிற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் இறுதிப்பருவ தேர்வுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. அதற்கான தீவிர ஏற்பாடுகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆன்லைன் மற்றும் நேரில் வந்து தேர்வெழுதுதல் என இரு முறைகளில் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து இருந்தார். இது தொடர்பாக மாணவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

madras university mba results
madras university 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஆன்லைனில் பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாணவர்கள் தங்களது மெயில் ஐடி போன்ற விபரங்களை பதிவேற்றமும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 2 மணிநேரம் நடைபெறும் தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும் எனவும் அதில் 30 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்தால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுகவே காரணம் – சட்டசபையில் முதல்வர் ஆவேசம்!!

தற்போது சென்னை பல்கலைக்கழகம் தங்களது மாணவர்களுக்கு 1.30 மணிநேரம் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வுகள் நடைபெறும் என அறிவித்து உள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வெழுதி முடித்த உடன் தங்களது விடைத்தாள்களை கொடுக்கப்பட்ட இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here