சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

0

சென்னை புளியந்தோப்பில் சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக 2 மின்வாரிய பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

மின்சராம் தாக்கி பலி:

இம்மாத தொடக்கத்தில் இருந்தே சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது, வீடுகளுக்குள் நீர் புகுவது என விளைவுகள் ஏற்படுவதுண்டு. இதற்கும் மேலாக சென்னையில் மழை நீர் தேங்கி இருந்த சாலையில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு நடந்து சென்ற அலிமா என்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவியது. சாலையில் நடந்து வரும் அப்பெண் தீடிரென மின்சாரம் தாக்கி சுருண்டு விழுகிறார். பார்ப்பவரை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் இது தொடர்பாக மின்வாரிய உதவிக்கோட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த அசம்பாவிதத்திற்கும் தங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என மின்வாரியம் தெரிவித்து இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பூமிக்கு அடியில் செல்லும் மின் வயரில் ஏறபட்ட கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here