தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் திறக்கப்பட்ட கட்டுப்பாடு அறைகள்!!

0

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடு அறைகளை மீண்டும் திறந்துள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிகளையும் கட்டாயமாக்கியுள்ளனர்.

கொரோனா:

சுமார் ஒரு ஆண்டு காலமாக தமிழகத்தில் கொரோன பரவல் பரவி வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராதது வருத்தத்திற்குறியதே. தற்போது தமிழகத்தில் கொரோனவிற்கான தடுப்பூசி மிக வேகமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாகவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய காலங்களில் மக்களுக்கு கொரோனா மீது உள்ள அச்சம் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதையே மறந்து, மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் அழைந்து வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் அனைவரும் மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் அறிவிப்பு!!

தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை, மாஸ்க் மற்றும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தெருக்களுக்கு சென்று கொரோனா பாதிப்பு கணக்கெடுப்பு நடக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஏற்கனவே இயங்கி மூடப்பட்ட கட்டுப்பாடு அறைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here