சூரப்பா மீதான விசாரணை – மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்க ஆணையம் முடிவு!!

0

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா வகித்து வந்தார். இவர் மீது நிதி முறைகேடு புகார் எழுந்தது. இதனால் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே கால அவகாசத்தை நீட்டிக்க விசாரணை ஆணையம் தற்போது மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரப்பா:

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மீது நிதி முறைகேடு புகார் பல எழுந்தது. எனவே இவர் மீது விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு ஓர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதற்கு பொறுப்பேற்ற கலையரசன், சூரப்பா மீதான புகார்களை மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும் அளிக்கலாம் என்று அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து விசாரணை ஆணையத்தில் சூரப்பா மீதான மின்னஞ்சல் புகார்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியது. மேலும் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் அண்ணா பல்கலை கழக பணி நியமனத்திற்காக சுமார் ரூ.200 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு ஆசிரியர் நியமனத்திற்கும் ஒரு நபருக்கு ரூ.13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 5 விமான போக்குவரத்து சேவைகள் – மத்திய விமான போக்குவரத்துத்துறை தகவல்!!

இதனை தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது வரும் 11ம் தேதியுடன் விசாரணைக்கான கால அவகாசம் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற உள்ளதால் விசாரணைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கலையரசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் இதற்கான மனுவை அரசிடம் சமர்ப்பிக்க படவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here