பிரியா பவானி ஷங்கருக்கு தம்பியாக நடிக்கும் “குக் வித் கோமாளி” புகழ் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் தற்போது நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி ஆகும். சமையலுடன் இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. இந்த நிகழ்ச்சியின் இரெண்டாம் சீசன் தற்போது நடைபெற்று வருகின்றது. கடந்த சீசனில் பங்கேற்ற நகைச்சுவை நடிகர் புகழ் தற்போது இந்த நிகழ்ச்சியின் இரெண்டாம் பாகத்திலும் பங்கு பெற்று வருகிறார்.

#INDvsENG டெஸ்ட் தொடர் – 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி!!

கடந்த சீஸனின் போதே புகழுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதே போல் இந்த சீனிலும் அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து புகழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தி அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. குறிப்பாக, நடிகர் அஜித் நடிக்கும் “வலிமை” படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கி நடிகர் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான், AV 33 என்ற திரைப்படத்தில் புகழ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புகழின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், ஜெயபாலன், ராதிகா மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் புகழ் நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு தம்பியாக நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here