சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் அசோக் டிண்டா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளராக திகழ்பவர் அசோக் டிண்டா. தனது காலில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வரும் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

அசோக் டிண்டா:

இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளராக திகள்பவர் தான் அசோக் டிண்டா. இவர் கடந்த 2009ம் ஆண்டில் டிசம்பர் 9ம் தேதி அன்று சர்வதேச டி 20 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜிம்பாவேவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இவர் இதுவரை இந்திய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் விளையாடிய 116 உலக தர போட்டிகளில் 420 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் விளையாடிய 98 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக 2013ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் இவர் டெல்லி, புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிக்காக விளையாடி உள்ளார்.

#INDvsENG டெஸ்ட் தொடர் – 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி!!

தற்போது இவர் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார். அப்போது அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு சில போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார். தனக்கு 37 வயது ஆகிவிட்டது. ஒரு வேக பந்துவீச்சாளருக்கு இதுவே அதிகம் என்று கூறி தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here