அடக்கடவுளே.., என்ன கொடுமை சார் இது., அட்மிட் கார்டில் சன்னி லியோன் புகைப்படம்.., ஷாக்கில் தேர்வர்கள்!!

0
அடக்கடவுளே.., என்ன கொடுமை சார் இது., அட்மிட் கார்டில் சன்னி லியோன் புகைப்படம்.., ஷாக்கில் தேர்வர்கள்!!
அடக்கடவுளே.., என்ன கொடுமை சார் இது., அட்மிட் கார்டில் சன்னி லியோன் புகைப்படம்.., ஷாக்கில் தேர்வர்கள்!!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் பாலிவுட் நடிகை புகைப்படம் இடம்பெற்றிருந்தது தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சன்னி லியோன்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் சன்னி லியோன். இவர் பாலிவுட் படங்களில் நடித்து ஹிட் ஆனதன் மூலம் இப்போது கோலிவுட், மாலிவுட், டோலிவுட் என அனைத்திலும் கால்பதித்து நடித்து வருகிறார். இந்தியாவில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் இவரின் புகைப்படம் ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எக்சாமிற்கு ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தனர்.

காதல் மனைவிக்காக பப்லு பிரித்விராஜ் என்ன செஞ்சு இருக்காங்கனு பாருங்களே.., இதெல்லாம் ரொம்பவே ஓவர்பா!!

இதில் ஒருவரது ஹால் டிக்கெட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மற்றும் தேர்வர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹால் டிக்கெட் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகும் நிலையில் கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு முன்னர் இது போன்று பீகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் வெளியிட்ட ஹால் டிக்கெட்டில் நரேந்திர மோடி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் பீகார் ஆளுநர் பாகு சவுகான் ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் இதே போன்று நடந்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here