Sunday, May 12, 2024

பாலியல் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவித் தொகை – மாநில அரசு அதிரடி உத்தரவு!!

Must Read

கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதால் மாநில அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக அம்மாநில அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா நோய் அச்சம் காரணமாக அதிகமாக பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மஹாராஷ்டிராவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு அரசு சார்பில் உதவி கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனை அடுத்து அம்மாநில அரசு அவர்கள் நலன் கருதி அவர்களுக்கு உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

இந்த அதிரடியான அறிவிப்பினை அம்மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கொரோனா பரவல் அச்சம் காரணமாக மத்திய அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இந்த பொது முடக்கத்தால் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

அரசின் முயற்சி:

இதனால் அவர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உதவி தொகையாக 5 ஆயிரம் ரூபாய் ஒரு நபருக்கு வழங்கப்படும். அவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் இருப்பின் கூடுதலாக 2500 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக மகாராஷ்டிரா அரசு 50 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காகவும், அவர்களை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள முதல் மாநிலம், மகாராஷ்டிரா தான். இந்த திட்டத்தால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன் அடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சியால் அம்மாநில மக்கள் வாய்அடைத்து போய் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -